top of page
தற்பெருமை
தன்னை பற்றி தானே பெருமைப்படுத்தி கொள்ளும் குணம், விரும்பத்தக்க குணம் அல்ல.
அரிதான, கடினமான காரியங்களை செய்தும் அமைதி காப்பர், நற்குணம் உடையோர்.
அற்ப காரியங்களை செய்து தம்பட்டம் அடித்து சொல்லுவார், சிற்குணம் கொண்டோர்.
தற்பெருமை பேசும் ஒருவரை எந்த மனிதரும் ரசிப்பதில்லை. ரசித்தால், அது ஏதோ காரியம் ஆக வேண்டும் என்பதால் மட்டுமே தவிர, அதில் உண்மை இருப்பதில்லை.
உன் பெருமை உனக்கு உயர்வு. ஆனால், அடுத்தவருக்கு ? அது எதற்கும் பயனற்ற பேச்சு.
நீ பேசும் தற்பெருமையை கேட்க முடியாமல், உன்னை பார்த்ததும் பேசி மகிழ பயந்து, ஓடி மறைவார்கள்.
உன்பெருமை, உன்திறமை இவைகளை மற்றவர்கள் சொல்ல கேட்டு நீ பெருமிதம் கொள்ள வேண்டும். நீயே உன் பெருமையை பேசி கொல்ல கூடாது.
பிறரை உன் பெருமையை பேச வைத்திடு.
அதை கேட்டு பெருமைபட்டு மகிழ்த்திடு.
bottom of page