நம்பிக்கை
நம்பிக்கை பல வகையுண்டு. தன்னம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என நீண்டு கொண்டே போகும்.
ஒருவரை வெகுவாக பாதிக்கும் செயல் நம்பிக்கை துரோகம்.
அளவற்ற நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றி பலன்பெறுபவர் நம்பிக்கை துரோகி.
அந்த மனிதரை, நம்பிக்கை துரோகியாக்கியது நாம்தான்.
அளவு கடந்து ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை.
யாரையும் நூறு சதவீதம் நம்புவது தவறு.
அளவுக்கு அதிகம் நம்புவதும், அதனால் ஏமாற்றப்படுவதும் காலம்காலமாக நடக்கும் செயல்களே.
உறவுகள், நண்பர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள், என்று எப்படிப்பட்டவர் ஆயினும், முழுமையாக நம்புவது, ஒரு தருணத்தில் ஏமாற்றத்திலும், மனவேதனையிலும் முடியும்.
மனிதர்கள் முகமூடி அணிந்தவர்கள். உண்மை முகத்தை பார்க்க முடியாது.
பொய் முகம் மிகவும் அழகு நிறைந்தது. நம்பிக்கை கொடுக்கக்கூடியது.
ஏமாற காத்திருக்கும் ஏமாளிகளை, எளிதில் கண்டுபிடித்து ஏமாற்றிவிடுவார்கள், இந்த நம்பிக்கை துரோகிகள்.
அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே ஆயுதம் - அளவுக்கு மீறி யாரையும் நம்பாமல் இருப்பது ஒன்றே.