top of page
சொல்லொழுக்கம்
கடுமையான சொற்களை பயன்படுத்தாதே.
அது கொடுமையான செயலுக்கு வித்திடும்.
வார்த்தைகளாய் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் வலியும் உண்டு
வலிமையையும் உண்டு.
வலி கொடுக்காதே, அது மீண்டும் வலிமையோடு திரும்பவந்து உனை தாக்கும்.
உன் பெருமை பேசாதே. நம்ப மாட்டார்கள்.
அளந்து பேசு. அறிந்து பேசு.
எவரையும் குறைக்கூறி பேசாதே. அது மற்றுமொரு எதிரியை உருவாக்கும்.
தெரியாததை பேசவே பேசாதே.
தெரிந்ததை பேசிப்பேசி தெறிக்க ஓடவிடாதே.
இனிய சொல்லை சொல். பயனுள்ள பேச்சை பேசு. பண்புடன் பேசு.
வெட்டிப்பேச்சில் ஈடுபடாதே.
வெட்டுக்குத்தில் மாய்ந்துப்போகாதே.
bottom of page