காமம்
உடலெடுத்த உயிர்களுக்கெல்லாம் பொதுவானது காமம்.
காமமன்றி உயிர்பெருக்கம் நடைபெறாது.
உயிர்களனைத்தும் உணவின்றி வாழ இயலாதுபோல்
உயிர்களனைத்தும் காமமின்றி வாழ்ந்திட இயலாது
இயன்றுவிட்டால், உலகம் இயங்காது. உயிர்கள் ஜனிக்காது. உயிர்களற்ற பூமியாகிவிடும்.
இவ்வுலகில் எவ்வுயிரினமும் காமத்தை பெரிதென எண்ணி வரைமுறைபடுத்தவில்லை.
காமத்தை பற்பல கட்டுப்பாடுடன் முறைப்படுத்திய ஒரே உயிரினம் மனித இனமே.
பசி தாகம் போல் காமத்தை எதிர்கொண்டு அனைத்து உயிரினமும் வாழுகிறது. இயற்கையின் உந்துதலுக்கு எல்லா உயிரினமும் ஆட்பட்டு காமத்தை எதிர்கொள்ளுகின்றன. மனிதனை தவிர.
மனிதயினம் காமத்திற்கு சட்டங்கள் இயற்றியது.
மனித சமுதாயம் நீதி நெறிமுறைகளை உண்டாக்கியது.
மனித கூட்டம் காமத்தை முறைப்படுத்தி அதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் முறையை பின்பற்றுகிறது.
முறைதவறிய காமத்தை சட்டமும் சமுதாயமும் ஏற்பதில்லை.
காமத்தால் நெறிதவறாதே
சட்டமும் சமுதாயமும் உன்னை தண்டிக்கும் மறவாதே