top of page
நட்பு
எதிர்பார்ப்போடு பழகுவது நட்பாகாது. காரியம் முடித்தவுடன் நட்பும் முறிந்துவிடும். இது காரிய நட்பு.
எவ்வளவு நெருக்கமாக, நேசமாக பழகினாலும், துன்பமும், எதிர்பாராத பிரச்சனைகளும் வரும்போது, ஓடி மறைந்து விடும் நட்பும் உண்டு.
உண்டு மகிழ்ந்து, ஓருயிராய் இணைந்து வாழ்ந்து, சிறிய விஷயத்தால், மனம் வேறுபட்டு, காலமெல்லாம் இணைந்திருக்க இயலா நட்பும் உண்டு.
உயிர் தோழன்/ தோழி , என்று இறுமார்ந்து இருந்த நட்பே, எதிரியாய் மாறி, கொலையும் செய்திடும் நட்பும் உண்டு.
இப்படி இன்னும் வித விதமான நட்புகள் உண்டு, பழகி அனுபவம் பெறுவதற்கு.
நட்பெல்லாம் இனிமை என்று ஏமாந்து போகாதே.
நட்பை சரியாய் தேர்ந்தெடு.
கூடா நட்பை தவிர்த்திடு.
bottom of page