உதவி
ஒருவருக்கு ஒருவர் உதவுவது உயர்ந்த பண்பு.
உதவி எந்த வகை என்பது முக்கியமில்லை, உதவுவதுதான் முக்கியம்.
ஒருவர் செய்யும் சிறு உதவி, அதை பெறுவோருக்கு பேருதவியாய் இருக்கும்.
இனிய ஆறுதல் சொற்களும், புண்பட்ட உள்ளத்துக்கு உதவிடும்.
ஊக்குவிக்கும் வீரமிக்க சொற்கள், தோல்வியில் துவண்ட நெஞ்சங்களை மீண்டெழ உதவிடும்.
சிறிதளவு உணவை உதவினால், பசியில் வாடிய ஒரு உயிர் பிழைத்திடும்.
அங்கங்கள் ஊனமுற்று, உணவுக்கு வழியற்றவர்க்கு, ஒருவேளைக்காவது பசியாற உணவளித்தால், அதுபோல் நற்செயல் வேறுண்டோ.
உடல்மறைத்து மானம் காக்க பயனாகும் ஆடை , பல இடத்தில கிழிந்து, பரிதாப நிலையில் உள்ளோருக்கு, நல்ல ஆடை கொடுத்து உதவினால், அது பெறுவோருக்கு மன நிறைவு கொடுக்கும்.
பகிர்ந்து வாழுவதே சிறப்பான வாழ்க்கை.
இருப்பதில் மிக சிறிதளவாவது, இல்லாதவர்க்கு கொடுப்பதே பகிர்ந்து வாழும் சிறப்பு நிலை.
கொடுப்போர் கெடு நிலையடையார்.