top of page

வாழவிடு 

அருமைமிக்க பிறவி மானிட பிறவி.

இது போற்றுதலுக்குரிய அறிய பிறவி. 

உயிரினங்களில் அதிக அறிவாற்றல் பெற்றது மனிதயினம். சிந்திக்கவும் தெரியும் சிரித்து மகிழவும் தெரியும்.

பறக்க தெரியும் , நீருக்கடியில் நீந்தி செல்லவும் தெரியும். நினைத்தவருடன் பேச தொலைபேசி உண்டு. திரையில் உருவத்தை பார்த்து பேசும் வளர்ச்சியும் உண்டு.
 
அரும்பெரும் வளர்ச்சியை எந்த உயிரினமும் செய்துபார்க்க கூட முடியாது - மனிதர்களை தவிர. 

மனித உயிரை மனிதரே கொல்லுவது அறிவுள்ள செயலா? 
அரிதாக கிடைத்த இந்த வாழ்வை கொலை வெறியில் அழிப்பது சரியா?

கொலையால், வாழ வேண்டிய ஒரு உயிரை அழித்து 
சட்டத்தின் நெறியால் வாழும் நாளெல்லாம் வீண் நாளாய் சிறையில் அவதியுறும் நிலை எதற்கு?

உயிரை எடுக்காதே. உயிர் விலைமதிப்பற்றது. 
உயிர்களை நேசி. கொலைக்கு அஞ்சு,

மனிதன் மனிதனை கொல்லுவது 
மனிதன் மிருக நிலையிலிருந்து இன்னும் முழுமையாய் மாறவில்லை என்றே காட்டுகிறது.

bottom of page