நோய்
உடல் ஒழுக்கம், நோயை தவிர்க்கும்.
ஒழுக்கமற்ற உணவுகளும், உடல் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும், நோயை ரத்தன கம்பளம்விரித்து வரவேற்பதாகும்.
உடலில் இயற்கையாகவே நோய் எதிர்க்கும் சக்தி உண்டு.
அதை தக்க முறையில் பாதுகாத்து வளர்த்திட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை பாழ் செய்யும் செயல்களான, புகைப்பது, போதை தரும் பொருட்களை உட்கொள்ளுவது, சுத்தமில்லாத நீரை பருகுவது, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது என நீண்டு கொண்டே போகிறது.
மனதில் ஏற்படும் காயங்களும் உடலின் எதிர்ப்பு சக்தியை சூறையாடிவிடும்.
மன நோய், உடல் நோயாக உருமாறி, உடலை உருக்கிவிடும்.
உள்ளிருந்து உடலை காக்க, நோய் எதிர்ப்பு சக்தியானது தினம், தினம் மிக கடுமையாக போராடுகிறது.
அது வென்றால், நாம் நோயில்லாமல் இருந்திடலாம்.
தோற்றால், நாம் நோயாளியாய் நலிந்து போய்விடலாம்.
நல்ல உணவு உண்ணும் பழக்கம்,
புகை, போதை பொருட்களை மறுத்தல், குடிநீர், மற்றும் சுவாசிக்கும் காற்றில் கவனத்துடன் இருத்தல்,
மன கவலைகளை கலைத்தல்,
போன்ற செயல்கள், உள்ளிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
நோயின்றி வாழ்
மருத்துவ செலவை தவிர்