மதம்
மதங்களை மனிதர்கள் தோற்றுவித்தார்கள். ஆதிமனிதர்களுக்கு மதம் இருந்ததில்லை.
மனித கூட்டத்தில் அறிவில், கனிவில், பரோபகாரத்தில் சிறந்த மனிதரை போற்றி பின்பற்றியதே மதம் ஆகிப்போனது.
அவர்களை பின்பற்றி அவர்களைப்போல் சிறந்து விளங்காமல், மத வெறியர்களாக மாறிவிட்டார்கள் மனிதர்கள்.
நல்லோர் வாழ்வின் நினைவால் உலகெங்கும் மதங்கள் தோன்றின.
தோன்றிய மதங்கள் ஒன்றுக்குகொன்று மோதிக்கொண்டு பகையாய் நிற்கின்றன.
ஒரு நல்லவன் குணத்தை பெருமைப்படுத்த உண்டான மதம், அந்த நல்லவனின் ஒரு குணத்தையும் பின்பற்றி வாழ முயலவில்லை.
இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மதம் எதற்கு ?
நல் ஒருவரின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்?
நல்லவராக வாழ முடிந்தால் மதம் எதற்கு ?
நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து, நல்லதையே பேசும் மனிதர்களுக்கு மதம் எதற்கு ?
மதம் ஒன்றில் இணைந்து, நல்ல மனிதராய் வாழ இயலாதபோது, அது இழுக்கான செயல் அல்லவா ? மதத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா ?
அன்பாக வாழ்ந்து, அன்பயே போதித்த ஒருவரின் ஈர்ப்பால் உண்டாகிய மதத்தில், அன்பற்ற நிலையில் அதை பின்பற்றுபவர்கள் இருப்பது எவ்விதத்தில் சரியாகும்.
மதம் முக்கியமில்லை
மனிதம் முக்கியம்