ஒழுக்கம்
நல்ல பழக்க வழக்கத்தில், ஒழுக்கம் தானாக வரும்.
ஒழுக்கம் கெட்டவர் - என்று பெயர் பெற்றால், மதிப்பு இழந்து, மரியாதை போய், அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலை வரும்.
ஒழுங்கு தவறி செய்யப்படும் காரியத்தால், தனக்கு மட்டும் அல்லாமல், தன்னை சார்ந்த குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தலை குனிவை உண்டாகும்.
ஒழுக்கத்தை கற்றே ஆக வேண்டும். ஒழுக்கம் இல்லாத வாழ்வு சீரழிந்து போகும்.
பேச்சில் ஒழுக்கம். பார்வையில் ஒழுக்கம்.
சகவாசத்தில் ஒழுக்கம். குற்றம் செய்யா ஒழுக்கம் என அத்தனை நிகழ்வுகளிலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம்.
ஒழுக்கமுடையார் உயர் மதிப்பு பெறுகிறார்.
ஒழுங்கின்மை உடைய ஒருவரை எவரும் மதிக்கப்படமாட்டார்.
ஒழுக்கம் ஒரு வாழ்வுமுறை பயிற்சி.
சக மனிதர்களிடம் நன்மதிப்பும், நற்சான்றும் பெறுவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை உணருக.
ஒழுக்கம் கற்று பழகு.
நல்ல மனிதர் என்ற பெயர்பெற்று வாழு.