top of page

பகையறு

நட்பும் பகையும் கலந்து வருவதுதான் வாழ்கை பயணம். 

நட்பை போற்று.
பகையை மாற்று. 

நட்பு உதவும். பகை கெடுக்கும். 
நட்பை வளர்த்திடு , பகையை கெடுத்திடு. 

ஒருவரை பகைக்கும் முன், அதன் பின்-விளைவுகளை யோசி. 
பகைத்தபின் அனுபவிக்கின்ற வேதனையும் துயரும் -

அவசரப்பட்டு செய்த தவறால் உண்டானது.

பண்பு இல்லாதவரே பகைவரை படைக்கிறார். 
அன்பு மறந்தவர்தான் பகையை வளர்க்கிறார்.

பகை, அது போராட்டத்தை உண்டாக்கும். பகைத்தப்பின்பு, பகைவர்களை எண்ணி அஞ்சியே நாட்களை கழிக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையை தடுத்து தப்பித்துக்கொள்ள பண விரயம் , நேர விரயம் , புத்தி விரயம் செய்ய வேண்டிய நிலை வரும். 

பகைத்தல் நிம்மதிக்கு கேடு. 
பகை உயிரையும் மாய்த்துவிடும்.

பகை மறு 
அமைதி பெறு

bottom of page