புண் நகை
சிரிப்பு மனிதர்களுக்கு கிடைத்த சிறப்பு.
பச்சிளம் குழந்தையின் மழலை சிரிப்பு முதல் பல் போன பொக்கை வாய் வயோதிகர் சிரிப்புவரை வகைகள் பல உண்டு.
சிரிப்பின் நன்மைகள் பற்பல உண்டு.
சிரிக்க மறுப்பவர்களும் இங்கு உண்டு.
பிறர் மனம் நோகாமல் சிரித்து மகிழ்தல் சிறப்பானது.
பிறரை அவமானப்படுத்தி பேசி அதில் சிரித்து மகிழ்வது மனித தன்மையற்றது.
மனம்விட்டு சிரியுங்கள். முகம் மலர சிரியுங்கள். கள்ளமில்லாமல் சிரியுங்கள்.
மனம் லேசாகும் பாருங்கள்.
இதயம் பலம்பெறும் காணுங்கள்.
நோய்விட்டோடும் நோக்குங்கள்.
பலரும் உங்களை நேசிப்பதை கவனியுங்கள்.
சிரிப்பின் நன்மைகள் ஏராளம்.
சிரிக்க மறந்தவர் பல நன்மைகளை இழக்கிறார்.
பிறர் மனது புண்படுத்தும் புன்னகை அது புண் நகை.
எல்லோரும் சிரித்து மகிழ்ந்தாலும் , எவர் மனதும் புண்படவில்லை என்றால் , அதுவே மனிதத்தன்மையுள்ள சிறப்பான சிரிப்பு.
புண்படுத்தாது புன்னகையுங்கள்
பண்பாடு மறவாதீர்கள்