top of page

சாதி

மனிதர்களை சாதி எனும் கொடும் நோய் தாக்கி பெரும்

அவதிக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசாங்கமும் சாதியை நீக்கிட முயற்சிக்கவில்லை.
மக்களும் சாதியை விட்டொழிக்க முடியவில்லை. 

சாதியில் உயர்வு , தாழ்வு என்று இருநிலைகள் கடைபிடித்து, மனிதர்களை மனிதர்களே வேறுபடுத்தும் அவலநிலை இது.

சாதிச்சண்டையில் இரு சமூகத்தினர்கள் மோதிக்கொண்டு படுகாயமும், படுகொலையும் நடப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

சாதியை மறுத்து திருமணம் கொண்டோரையும் வெறுத்து ஒதுக்கும் நிலையும் இங்குண்டு.
அவர்களை கொலை செய்யும் அளவுக்கும் வெறிகொண்டு செயல்படுத்தும் சாதி வெறியர்களும் இங்குண்டு.

சாதி பேசி சாதிப்பதுதான் என்ன ?
சாதிபேதத்தால் சீரழிந்து போனதைத்தான் கண்டோம்.

 

சாதியை மறந்து, மனிதர்கள் அனைவரையும் சமமாக

பாருங்கள், பழுகுங்கள், மதியுங்கள்.

சாதிக்காக சண்டை, உயிர் பலி கூடாது. 
சாதியை ஓரம் தள்ளி, ஒற்றுமையை அரவணைத்து, அனைவரும் ஒரு சாதி, அது மனித சாதி என்று இணைந்து வாழ்வோம்.

சாதியை மறந்திடு 
ஒற்றுமையில் திளைத்திடு

bottom of page