top of page

பணம்

வாழுவதற்கு தேவையானது பணம். 
அதை ஈட்டுவதற்கு தேவை உழைப்பு.

பணமின்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத உலகமிது.
பணமின்றி மனிதர்களுக்கு இடையே வாழுவது என்பது, இயலாத ஒன்று.

 

மனிதர்களைவிட, அவன் படைத்த பணமே அதிகம் மதிக்கப்படுகிறது 

 

பணமில்லாத நல்லவனும் இங்கு கெட்டவனாக தெரிகிறான்.
பணமுள்ள கெட்டவனையும் நல்லவனாக கொண்டாடி கூத்தாடும் உலகமிது.

 

பணமிருந்தால் எல்லா பட்டமும், பெருமைகளும் தேடி வரும். 
பணம் இழந்தவரின் மதிப்பும், மரியாதையும் மாயமாய் மாய்ந்து போகும்

 

இது பணத்தால் உருவாக்கப்பட்ட பூமி.
பணமிழந்தால் உனைப் பிணமென்று ஒதிக்கிடும்.

 

உன் தேவைக்கு உழைத்து பணம் சேர். 
சேர்த்ததை சிக்கனமாய் செலவுசெய்.

bottom of page