top of page
சிக்கனம்
சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல.
பண வருமானத்திற்கு உட்பட்டே செலவு செய்வது சிக்கனம்.
பணவரவை தாண்டி செய்யும் செலவு கடன் சுமையில் தள்ளிவிடும்.
கடன் வாங்கி பழகிவிட்டால், அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபட எளிதில் இயலாது.
கடன் இல்லாத வாழ்வு, நிம்மதி கொடுக்கும்.
கடன் நிம்மதியை கெடுக்கும்.
தேவையற்றதை வாங்குவது, வருமானத்தை மீறி ஆடம்பர செலவு செய்வது, கௌரவத்தை நிலைநாட்ட கடன்பட்டு செலவு செய்வது போன்ற பற்பல காரணங்களினால் சிக்கனம் காற்றில் பறக்கிறது.
பண வருமானத்தை பெருக்கு.
செலவை சுருக்கு.
சேமிப்பை கடைபிடி.
உயர்ந்த வாழ்வை எட்டிப்பிடி.
bottom of page