top of page

வெறுப்பு 

மனிதர்களுக்கு உள்ள பல குணங்களில் வெறுப்பும் ஒரு குணமாகும்.

குறிப்பிட்ட சுவையை வெறுப்பவர் உண்டு.
குறிப்பிட்ட நிறத்தை வெறுப்பவர் உண்டு.
குறிப்பிட்ட ஓசையை வெறுப்பவர் உண்டு.
குறிப்பிட்ட வாசனையை வெறுப்பவர் உண்டு.

வெறுப்பு இயற்கையில் மனிதர்களுக்கு தோன்றிய குணமாகும். 
வெறுப்பின்றி வாழும் நிலையை இயற்கையாகவே மனிதர்களுக்கு கொடுக்கபடவில்லை.

வெறுப்பு சக மனிதர்களை பாதிக்க கூடாது.
வெறுப்பினால் மற்றவருக்கு தீங்கு செய்ய கூடாது. 

வெறுப்பினால் வார்த்தையில் நிதானம் தவற கூடாது.
வெறுப்பு உணர்வை வெளிக்காட்டி பகை வளர்க்க கூடாது. 

வெறுப்பு நிதானம் தவற செய்யும். 
நிதானம் இழந்தால் விபரீதம் உண்டாகும். 
விபரீதம் பகையாய் மாறும். 
பகை உயிரையும் மாய்த்துவிடும்.

வெறுப்பை அடக்கி வைத்திடு 
நட்புடன் சிறப்புற்று வாழ்ந்திடு

bottom of page