top of page
பொறாமை
பொறாமை அது உன் இயலாமை.
பிறர் பெற்றதை கண்டு பொறுக்க முடியாமை.
பொறாமை மனதை கெடுக்கும்.
நல்லுறவை கெடுக்கும்.
கேடுசெய்திட துணியும்
கேடுகெட்ட நிலைக்கு உனைத்தள்ளிடும்
பொறாமை உனைத் தவறிழைக்க தூண்டும்
தூண்டில் மீனாய் பொறாமையிடம் சிக்கிடுவாய்
மதிகெட்டு பகை வளர்ப்பாய்
சுகங்கெட்டு கெடுநிலையடைவாய்
பொறாமை நோய் பீடிக்கவிடாதே
மன நோய்க்கு ஆட்பட்டுவிடாதே
பொறாமையை விடு
பொறுமையாய் முன்னேறு
bottom of page