top of page

அகங்காரம்

எனக்கு எல்லாம் தெரியும். 
எனக்கு சொல்லித் தராதே, எல்லாம் எனக்கு அத்துப்படி. 
இப்படி பேசுவது சிற்றறிவின் சிந்தனை கோளாறாகும்.

எவருக்கும் எல்லாமும் தெரிய சாத்தியமில்லை. எவரும் அனைத்தையும் தெரிந்துகொள்ள அவசியமில்லை. 

இது நித்தமொரு மாறுதலுக்கு உட்பட்ட பூமி.
நேற்று கற்று தேர்ந்தது, இன்று புதிய கோணத்தில் மாறுதல் அடைகிறது. 

 

கல்வி மாறுகிறது. வாகன எரிபொருள் மாறுகிறது. மின்சார மூலப் பொருள் மாறுகிறது. கட்டிட கலை புதுமை நிலையில் மாறுகிறது. இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டது.

 

ஒன்றிரெண்டு விஷயங்கள் சற்று கூடுதலாக தெரிந்துவிட்டதால், எல்லாம் தெரியும் என்று ஆணவ பேச்சு அறிவார்ந்த செயல் அல்ல.

அடக்கம் அறிவின் வெளிப்பாடு.
ஆணவம் அறியாமையெனும் குறைபாடு.

bottom of page