top of page
பதற்றகேடு
பரபரப்பான வாழ்வின் சூழ்நிலை,
முன்னேற துடிக்கும் மனநிலை,
நித்தம் சந்திக்கும் விதவித அனுபவங்கள்,
பல சறுக்கல்கள் சிற்சில வெற்றிகள்
முயன்றதெல்லாம் வெற்றிபெறுமா ?
அத்தனையும் வீணாகிவிடுமா ?
மனதை வாட்டும் கேள்விக்கு விடையேது ?
தோல்விகள் காட்டும் பயம் ஒருபக்கம்
வெற்றியை நிலைநிறுத்த போராட்டம் மறுபக்கம்
இவைகள் பதற்றத்தை உண்டாக்கி
கோபமும் , எரிச்சலையும் உமிழும்
நிதானம் படிப்படியாக குறையும்
அமைதி மெல்லமெல்ல மடியும்
பதற்றம் மனதில் வேர்ப்பிடித்து விட்டால்
உடலும், உள்ளமும் , உறவும் பாழ்ப்பட்டுவிடும்
பதற்றம் கொள்ளாதே
பதற்றம் கொல்லும் மறவாதே
bottom of page