top of page

பயத்தின் சிறப்பு

ஆயிரம் கிளைகள் கொண்டது பயமெனும் மரம். 

பயம் கொள்ளுவது முன்னேற்ற வாழ்வுக்கு தடை. 
பயம் கொள்ள வேண்டியதற்கு பயப்படாத வாழ்வு தாழ்வடையும்.

பயப்பட வேண்டியற்கு பயப்படவேண்டும். 
பயப்பட கூடாததற்கு பயம்கொள்ளுதலும் தவறு.

குற்றம் செய்வதற்கு பயப்பட வேண்டும். 
கூடா நட்புக்கு பயப்பட வேண்டும். 
குறை கூற பயப்பட வேண்டும். 
அவமதிக்க பயப்பட வேண்டும். 
பொய்பேசி ஏமாற்ற பயப்பட வேண்டும். 
எவர் உள்ளத்தையும் நோக செய்ய பயப்பட வேண்டும். 
நம்பியவரை கெடுக்க பயப்பட வேண்டும். 

 

இப்படிப்பட்ட உன் பயத்தால் பலர் பயனடைவார்கள்.
உன் பயம் பலருக்கு உபயம்.

bottom of page