top of page

பொய்யுளைச்சல்

பொய் சாதாரணமாக புழக்கத்தில் உள்ள பழக்கம். 

மெய்யன்றி வாழ்தல் எளிதாகி ,
பொய்யின்றி வாழுதல் கடினம் என்றாகிவிட்டது.

சொல்லிய பொய்யை தக்க வைத்துக்கொள்ள 
பற்பல கற்பனை பொய்களை அடுக்க வேண்டும்.

அடுக்கிய பொய்களை நினைவில் வைத்துக்கொண்டு, குட்டு வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஒருவரிடம் சொல்லும் பொய்க்கே இந்த சிரமம் என்றால், இதையே பத்து பேர்களிடம் சொல்ல நேரும்போது அது மகா சிரமம்.

பொய் பேசி இவ்வளவு அவஸ்தை பட வேண்டுமா ?
அதற்கு பதிலாக, உண்மை பேச முயற்சிக்கலாமே.

பொய் நிம்மதி கெடுக்கும் 
மெய் நிம்மதி கொடுக்கும்

bottom of page