top of page

விரக்தி 

தொடர் தோல்வி விரக்தியை கொடுக்கும். 
தொட்டதெல்லாம் கெட்டால் விரக்தி உண்டாகும்.

விருப்பிய எதுவுமே கைகூடாவிட்டால், விரக்தி ஏற்படும். 
விரும்பியதெல்லாம் தொலைந்துபோனால் விரக்தியில் போய் முடியும்.

 

விரக்தி மன வலியாக மாறிடும். சோர்வையும், தளர்வையும் கூட்டும்.
நம்பிக்கையை சிதைக்கும். மன உறுதியை கெடுக்கும்.

உடல்நிலையை பாதிக்கும். தேக பொலிவை இழக்கும். 
வாழவே தகுதியில்லை என்று தோன்றும், தற்கொலைக்கும் தூண்டும். 

எந்த நிலையிலும் துவண்டு போகாதே. முயற்சியை தளர்த்திவிடாதே.
உன் மீது நம்பிக்கை வை. உன் பலம் உன் மன உறுதியில் உள்ளது.

தொடர் தோல்விகள் கற்று கொடுத்த பாடங்களை புரிந்துகொள்.
அணுகுமுறையை மாற்றி செயலாற்றி வெற்றிகொள்.

விரக்தி முன்னேற்றத்திற்கு தடை.
விரக்தியை விரட்டுவதே முறை.

bottom of page