top of page
செயல்
செயலற்று இருக்க முடியாது. செயல்தான் ஒருவர் உயிருடன் இருப்பதற்கு சாட்சி.
அவரவர் கடமைக்கு ஏற்றாற்போல் செயலாற்றுவர்.
அதில் நேர்மையும், நெறியும் இருப்பதே உயர்செயல் ஆகும்.
செய்யப்படும் செயல் பிறருக்கு துன்பம் நேரும்படி இருக்க கூடாது.
தனக்கு லாபம், மகிழ்ச்சிக்கிட்டும் என்பதற்காக பிறருக்கு துரோகச்செயல் செய்திடல் ஆகாது.
தீதான செயல் செய்து, வீணான பகை உண்டாகி, கேடான நிலையடைந்து, மாளாத சிக்கலில், மீளாத துயரில், வாழ்நாள் கெடும் என்று அறிவாயாக.
தூய செயலே மதிப்பை உயர்த்தும். வெறுக்கத்தக்க செயல்கள் மதிப்பை கெடுக்கும்.
மனிதர்களின் செயப்பாடுகளினால் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.
நற்செயலை செய்திடு
நன்மதிப்பை பெற்றிடு
bottom of page