top of page

போதை பழக்கம் 

மது வகைகளில் கிடைக்கும் போதைக்கு அடிமை ஆனவர்கள் ஏராளம். 
கஞ்சா போன்ற வஸ்துக்களிடம் மயங்கி கிடப்பவர்கள் பலருண்டு.

இந்த வகை பழக்கங்கள் மகிழ்வை கொடுத்து கொண்டே, உடலையும் மனதையும் பாழ்படுத்திவிடுகிறது.

மகிழ்ச்சி கிட்டுகிறது என்பதால், இந்த பழக்கங்களை நிறுத்திவிட இயலாது.

மகிழ்வுடன் இருப்பதற்கே போதை பழக்கத்துக்கு அடிமைப்பட்டு சிக்கிக்கொள்ளுகிறார்கள்.

போதை கொடுப்பதோ மகிழ்வான மயக்க நிலை.
அது கெடுப்பதோ உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும்.

மெல்ல சாகடிக்கும் விஷத்தை, மகிழ்வுடன் அருந்தி, துன்புற்று சாக, தானே தனக்கு வழி வகுத்துக்கொள்ளும் போதை பிரியர்களை என்னென்று சொல்லுவது ?

அறிவை மயக்கும் எந்த விஷயமும் ஆபத்தானது.
தெளிவு தரும் விஷயமே உயர்வானது.

உன்னை நீயே கொல்லாதே 
உன் உயிர் விலைமதிப்பானது

bottom of page