top of page

மனம்

உன் ஒவ்வொரு செயலையும் , ரகசியங்களையும் அறிந்த ஒற்றன் - மனம்.

ஊரையும் உலகையும் ஏமாற்றலாம், ஆனால் உன் மனதை ஏமாற்ற முடியாது.

மற்றவர்கள் அறிய முடியாதபடி மிக சாமர்த்தியமாக செய்த அத்தனை கெட்ட செயல்களையும் உன் மனம் அறியும். 

அச்செயல்களை உனக்கு மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தும் கருவியாக உனக்குளேயே ஒளிந்துகொண்டு இருப்பதுதான் - மனசாட்சி.

உன் நிம்மதியை கெடுக்கும்.
உனக்கே உன்னை தோலுரித்து மீண்டும் மீண்டும் காட்டும். 
நீ நல்லவனாக நடிப்பதை பார்த்து கைகொட்டி சிரிக்கும். 

அவஸ்தைப்படுவாய்
ஆரோக்கியம் கெடுவாய் 

எதிரி வெளியில் என்றால் சூழ்ச்சி செய்தாவது வெல்லுவாய் 
எதிரி உனக்குள்ளே என்பதால் வெல்லவும் முடியாது வெளியில் சொல்லவும் முடியாது 

மனதை அறிந்துகொள் 
மனநிம்மதி பெற முயன்றுவெல்

bottom of page