காதல்
இயற்கை உணர்வு காதல்
இயற்கையின் உந்துதல் காதல்
ஆண் காதல், பெண் காதல் இரண்டும் வெவ்வேறு வகையானது.
இவை இரண்டுமே எண்ணங்களாலும் செயல்களாலும் வேறுபட்டவை.
இருப்பினும், வேறுபாடுகளை இரு பாலரும் சற்றே விட்டுக்கொடுத்து காதல் வளர்க்கின்றனர்.
விட்டுக்கொடுத்தல் என்பது இயற்கை குணத்தை அடக்கிகொள்ளுவதாகும்.
சரியாக சொல்லுவது என்றால், இருவரும் சொந்த குணத்தை மறைத்து, சிறப்பாக நடிப்பதே காதலாகும்.
நாட்கள் செல்ல செல்ல இருவரின் சுய குணம் வெளிப்பட ஆரம்பிக்கும்.
சொற்போர் துளிர்விடும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவர். விரிசல் வெடிக்கும். பிரிவுக்கு அடித்தளம் ஆரம்பமாகும்.
காதலித்த இருவரில் ஒருவர் வேறு துணை பெற்றிடுவார். இதை கண்டு காதலித்த மற்றொருவர், பகை உணர்வு கொள்ளுவார்.
பகையில், ஆணாக இருந்தால் பெண்ணின் முகத்தில் கொடுரமான அமிலத்தை ஊற்றி மகிழ்வார்.
பகையில், பெண்ணாய் இருந்தால், காவல் நிலையம், நீதி மன்றம், ஊடகங்கள், வீட்டுக்கு முன் மறியல் என நீண்டுகொண்டே போகும்.
காதல் அது துணை தேர்வு செய்யும் நேர்காணல்
அதில் அதிகப்படியாக நடிப்பே இருக்கும்.
நெருங்கி நேசிக்கும்போது நொறுங்கிப்போகும் நடிப்பெல்லாம்.
காதல் செய்யுங்கள்.
செய்த இருவரில் எவர் ஒருவருக்கு பிடித்தம் இல்லையென்று விலகினால், மகிழ்வுடன் விலகுங்கள்.
பகை வேண்டாம். கொடூர செயலேதும் வேண்டாம்.
அன்பு வளர்த்தீர்
அன்புடன் பிரிவீர்