top of page

பெண்

பூமியில் உள்ள அனைத்து உயிர் இனங்களில் உள்ள பெண் இனம் முழுவதுமே படைப்பாளிகள். 

பெண் உயிரினங்கள் படைப்பதை நிறுத்திக்கொண்டால், அத்தனை உயிரினங்களும் அழிந்து, இல்லாது போயிருக்கும்.

பெண் இல்லையேல் இன்னுமொரு பெண்ணுமில்லை, ஆணுமில்லை.
பெண்ணே பெண்ணையும் படைக்கின்றாள், ஆணையும் படைக்கின்றாள்.

பெண்ணாலேதான் இங்கு உயிரினங்கள் உற்பத்தி ஆகின்றது.
பெண் முடிவு செய்தால் மட்டுமே இங்கு உற்பத்தியான சிசுக்கள் உயிர் வாழ முடியும்.

பிறந்த குழந்தைக்கு பால் புகட்டி, பாதுகாவல் புரிந்து, பேணி வளர்க்காவிட்டால், இங்கு நான் ஏது, நீ ஏது, நாம் ஏது.

இன்றைய மனித கூட்டம் பெண்கள் கொடுத்த கொடை.

நம்மை சுமந்து, வலிமிகுதியில் பெற்றெடுத்து, உயிர்ப்புடன் உலாவர உதிரப்பால் உவந்து கொடுத்து, தன்பசி, சுகம் மறந்து, நாம் நோய்யற்று நலமுடன் வளர்ச்சி பெற, உதவிய உன்னத பெண் இனத்தை, போற்றி காப்பதே சிறப்பாகும்.

bottom of page