எண்ணங்கள்
எண்ணற்ற எண்ணங்களை சுமப்பவர்கள் நாம். எண்ணங்கள் அனைத்தும் நிரந்தர பதிவு பெறுவதில்லை.
உதாரணதிற்கு, பத்து நாட்கள் முன் என்ன நிறத்தில் ஆடை அணிந்தோம் என்று யோசித்தால் , அது நினைவுக்கு வராது.
இதுபோல், தினம் தினம் நிரந்தர பதிவு செய்யாமல் நிறைய நிகழ்வுகளை மனம் கடந்து சென்றுவிடும்.
மனதுக்கு பிடித்த, மற்றும் பாதித்த நிகழ்வுகளை மட்டும் அழிக்காமல் பதிவு செய்து வைத்துக்கொள்ளுகிறது.
இதில் , அதிகம் பிடித்த , அதிகம் பாதித்த சம்பவங்கள் மிக அழுத்தமாக , ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது. அவைகளை எளிதில் மறக்கவோ அழிக்கவோ இயலாது.
அதிகம் பிடித்த விஷயங்கள் அனைத்தும் மன மகிழ்ச்சி கொடுக்கும். அதிகம் பாதித்த சம்பவங்கள் தீராத மன வலியையும் துயரத்தையும் கொடுக்கும்.
பாதிக்கின்ற விஷயங்களை தாங்கிக்கொள்ளுகின்ற மன பலம் இல்லை என்றால் , உடல் சோர்வு, எளிதில் நோய்வாய்ப்படுத்தல், மனோ வியாதி உண்டாகுதல் , தோல்வி பயம் போன்றியவைகள் வந்து சேரும்.
துன்பம் தந்த நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இருந்து அகற்றுங்கள்.
துன்பமே வாழ்வு என்று எண்ணிவிடாதீர்கள்.
ஆழமான துன்ப நினைவுகளில் இருந்து விடுபட பல வழிகள் உண்டு. சரியாக கடைப்பிடித்தால் விடுபட்டு, மனோ தைரியத்துடன் வாழ முடியும்.
துன்பம், உங்களை துரத்த விடாதீர்கள்
துன்பத்தை, நீங்கள் துரத்தி விடுங்கள்