top of page

கோபம் கொல்

கோபம் பொல்லாதது. கோபத்தால் நன்மையை விட தீமையே அதிகம் உண்டாகும். 

கோபப்பட்டு திட்டுவதால் தேவையற்ற, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.

கோபத்தில் ஒருவரை அடிப்பதால், எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படலாம். 

ஒருவர் பேசுவதை எதிர்கொள்ள முடியாமல் கோபப்பட்டு, கடும் சுடும்சொல்லை உதிர்த்துவிட்டால், பல இன்னல்களையும் வேதனைகளையும் அனுபவிக்க நேரிடும். 

கோபம் நம்மை ஆட்சி செய்தால் பெயர் கெட்டு, மதிப்பிழந்து, பழி சுமந்து, வெறுக்கத்தக்க மனிதராய் காலம் கழிக்க நேரிடும். 

bottom of page