தோல்வி
தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்ச்சி செய்.
தளர்வு அடையதே.
தவறான முடிவிற்கு வராதே.
வெற்றிக்கு உன்னுடைய ஒரு முயற்ச்சி போதவில்லை.
ஒரு கல்லில் மாங்காய் விழவில்லை. அடுத்த கல்லை எறி.
மாங்காய் தான் இலக்கு.
கல்லையும் தாண்டி வேறு எத்தனையோ உபகரணம் கொண்டு மாங்காவை பறிக்க முடியும்.
வெற்றிபெற எடுத்த முயற்சியை மாற்றி யோசித்தால் இன்னும் சிறப்பாக செய்து வெற்றியை அடைய முடியும்.
தோல்வி முடிவல்ல.
முயற்சிக்கு முடிவுகட்டாதே.
வெற்றிபெறும் வரை ஓயாதே.
வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் இடறிவிழும் இடம் - தோல்வி.
வெற்றி பாதையெங்கும் தோல்வி அடர்ந்து படர்ந்து நிறைந்து இருக்கும். தோல்வியை தாண்டாது வெற்றி அமையாது.
இங்கொன்று அங்கொன்றுமாய் அபூர்வமாய் தோல்வியில்லா வெற்றி வாய்த்திடும்.
அதுவே தொடர்ந்து கிடைக்காது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
தொடர் முயற்சி , தளரா மனம் இவை இரண்டும்தான் தோல்விகளை கடந்து செல்ல உதவும் உயர் சக்தி.
தோல்வியினால் சோர்வுற்று செயலை கைவிடுவதும்
தொடர்தோல்வி பயத்தால் தற்கொலை முடிவெடுப்பது
இவை வெற்றியை நெருங்கிக்கொண்டு இருக்கின்றோம் என்று புரியாது எடுக்கும் அவசர முடிவு.
தோல்விகண்டு அதைரியம் கொள்ளாதே
முயற்சியை விட்டுவிடாதே
நீ வெற்றியை நோக்கி நடந்து கொண்டு இருக்கிறாய்
தோல்வி எனும் பாதைதான் வெற்றி எனும் இடத்துக்கு வழி.
தோல்விப்பாதையில் நடந்து செல்
வெற்றியை அடைந்து நிமிர்ந்துநில்